கோவையில் 900 கோடி அபராத அதிர்ச்சி! சட்டவிரோத மண் கொள்ளையில் செங்கல் சூளை கும்பல் சிக்கியது...!
900 crore fine shock Coimbatore Brick kiln gang caught illegal land grabbing
கோவை மாவட்டத்தின் சின்னத்தடாகம், வீரபாண்டி, சோமையம்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகள் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளன. மலையடிவாரத்திற்கு அருகிலுள்ள ஓடைகள், நீர்வழித்தடங்களில் சுமார் 1.10 கோடி கன மீட்டர் மண் சட்டவிரோதமாக அகழப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டின் உத்தரவின்பேரில் 177 செங்கல் சூளைகள் சீல் வைக்கப்பட்டன. சூழல் நாசத்துக்கு காரணமான இச்செயல்பாடுகளுக்கு உரிய இழப்பீடு பெற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.

ஐகோர்ட்டின் உத்தரவின்படி, நியூ டெல்லி எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனம் (டெரி) நிபுணர்கள் 4 மாதங்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். ஆரம்பத்தில் ரூ.3,000 கோடி வரை அபராதம் விதிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டாலும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மறுபரிசீலனை கோரிக்கையின் பேரில் புதிய மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
புதிய அறிக்கையின் படி, செங்கல் சூளைகளின் சூழல் அழிவுக்கு ரூ.900 கோடி அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சூளைக்கும் தனித்தனியாக எவ்வளவு அபராதம் விதிக்க வேண்டும் என்ற விவரமும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) வழிகாட்டுதலின் படி, இந்த அறிக்கை ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் சூளை உரிமையாளர்களிடமிருந்து அபராதம் வசூலிக்க நீதிமன்றம் உத்தரவிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
900 crore fine shock Coimbatore Brick kiln gang caught illegal land grabbing