மொட்டை மாடியில் மயங்கிக்கிடந்த 7-ம் வகுப்பு சிறுமி...! செங்கல்பட்டில் அரங்கேறிய கொடூரம்...! - பாலிடெக்னிக் மாணவர் உள்பட 2 பேர் போக்சோவில் கைது..!
7th grade girl fainted terrace horrific incident took place Chengalpattu 2 people including polytechnic student arrested under POCSO
செங்கல்பட்டு மாவட்டத்தில் 7-ம் வகுப்பு மாணவி மீது நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உட்பட 2 பேரை காவலர்கள் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள வயலூர் ஊராட்சிக்குட்பட்ட காரைத்திட்டு கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் (20) மற்றும் அவரது நண்பர் அஜய் (27) ஆகியோர், 14 வயது மாணவியை மிரட்டி தனியிடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தச் சம்பவத்தின் போது சிறுமி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பிய குற்றவாளிகள் தலைமறைவாகினர்.இதற்கிடையில், வெளியே சென்ற மகள் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் பதற்றமடைந்த அவரது தந்தை பல இடங்களில் தேடுதல் நடத்தினார்.
அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது கிடைத்த தகவலின் அடிப்படையில் அருகிலிருந்த ஒரு வீட்டின் மொட்டைமாடியில் தேடியபோது, சிறுமி மயக்க நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனடியாக சிறுமியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், காரைத்திட்டு பகுதியில் பதுங்கியிருந்த மகேஸ்வரன் மற்றும் அஜய் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மகேஸ்வரன், திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்று வருகிறார். அஜய் மரக்காணம் பகுதியில் உள்ள இறால் பண்ணையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த வழக்கின் பின்னணி மற்றும் மேலும் தொடர்புடைய தகவல்கள் குறித்து காவலர்கள் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
English Summary
7th grade girl fainted terrace horrific incident took place Chengalpattu 2 people including polytechnic student arrested under POCSO