வலைத்தளங்களில் தீயாய் பரவும் செய்தி...! "நான் முதல்வன்" திட்ட நிதி நிறுத்தம் உண்மையா...? - தகவல் சரிபார்ப்பகம்...!
news spreading like wildfire websites Is it true that funding I am first project stopped Fact Checker
தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள விளக்கம், சமூக வலைத்தளங்களில் பரவி வந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.‘நான் முதல்வன்’ போட்டித் தேர்வு உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை தமிழ்நாடு அரசு நிறுத்திவிட்டதாக அண்மையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தவறான தகவல்கள் வேகமாக பரவின.

இதனால் திட்டத்தின் பயனாளிகள் மத்தியில் குழப்பமும் கவலையும் உருவானது.‘நான் முதல்வன்’ போட்டித் தேர்வு உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இந்த மாதம் வழங்கப்பட வேண்டிய உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அரசு நிதி ஒதுக்கீட்டை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் பரப்பப்பட்டன.
ஆனால் இந்த தகவல்கள் அனைத்தும் முற்றிலும் ஆதாரமற்றதும் தவறானதுமாகும் என தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அளித்த விளக்கத்தில், “திட்ட பயனாளிகளுக்கான உதவித்தொகை வழக்கம்போல் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரத்தில் அவர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஜூன் மாதத்திற்கான உதவித்தொகையும் திட்டமிட்டபடி பயனாளிகளின் வங்கி கணக்குகளில் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, உண்மைத் தகவலை உறுதிப்படுத்தாமல் சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்பவோ பகிரவோ வேண்டாம் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
English Summary
news spreading like wildfire websites Is it true that funding I am first project stopped Fact Checker