பொதுத்தேர்வு எழுத 75% வருகைப் பதிவு கட்டாயம் இருக்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்.!
75% attendance registration is mandatory to write public exam
பொதுத்தேர்வு எழுத 75 சதவீதம் வருகைப்பதிவு இருக்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிந்து வைத்தார்.

அதன் பின்னர் ஒவ்வொரு அரங்காக சென்று பார்வையிட்ட அவர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பயிர்களை நன்றாக இருக்கிறதா என சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த அரங்கில் பிள்ளையாருக்கு நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

அதன் பின்னர் செய்திகளை சந்தித்து பேசிய அவர், பள்ளிகளுக்கு ஆண்டுக்கு 3 நாட்கள் வந்தால் போதுமானது மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுபவர்கள் என்ற செய்தி தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், மாணவர்கள் கட்டாயம் 75% வருகை பதிவு வைத்திருந்தால் மட்டுமே ஹால் டிக்கெட் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக 11 மற்றும் 12 வகுப்பு பொது தேர்வுகளில் நிறைய மாணவர்கள் தேர்வு எழுதாததால், பொதுத் தேர்வு எழுத மாணவர்கள் ஆண்டிற்கு 3 நாட்கள் பள்ளிக்கு வருகை தந்தாலே ஹால் டிக்கெட் வழங்கப்படும் தகவல் வெளியாகியது குறிப்பிடத்தக்கது
English Summary
75% attendance registration is mandatory to write public exam