700 ஆண்டுகள் பழமையான நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு!
700 year old stone inscription
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் சேர்ந்து கிருஷ்ணகிரி அடுத்துள்ள கொடுகூரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வில் அப்பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஸ்ரீ ராமனின் வீட்டின் முன்பு உள்ள ஒரு நிலத்தில் கவிழ்ந்த நிலையில் இருந்த நடுக்கல் மற்றும் கல்வெட்டினை கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தெரிவித்திருப்பதாவது, 700 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயங்கொண்ட சோழ முரசு நாட்டை ஆண்ட குருவேந்த மாராயனின் மகன் பகைவர் கண்ட நாராயணன் இந்த ஊரை அழிக்க வரும்பொழுது அவரை வழிமறித்த சண்டையில் லைவன் என்பவர் உயிரிழந்த செய்தியை இந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது.

படைத்தளபதியை குறிப்பதற்காக தந்திரி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. கண்டறியப்பட்ட நடு கல்லில் வீரன் ஒரு கையில் வாளும் மறுக்கையில் வில்லும் வைத்துள்ளார்.
அவரது உடம்பில் 2 அம்புகள் கிழித்து செல்கின்றன. அந்த வீரன் உயிரிழந்த பிறகு அவனை இரண்டு மங்கைகள் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் காட்சியும் உள்ளது.
இந்த ஆய்வின்போது கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.
English Summary
700 year old stone inscription