61 நாட்கள் காத்திருப்புக்கு இன்று நள்ளிரவோடு முற்றுப்புள்ளி...! ஆழ்கடலுக்குப் பாயத் தயாராகும் 15,000 விசைப்படகுகள்...! - கடலோர மாவட்டங்களில் களைகட்டும் திருவிழா கோலம்! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் மீன்வளத்தை பாதுகாத்து, மீனினங்களின் இயற்கை இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் அமல்படுத்தப்படும் மீன்பிடித் தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

இதையொட்டி, தமிழகம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்திருந்தது.தடைக்காலம் முழுவதும் மீனவர்கள் தங்களது விசைப்படகுகள், மீன்பிடி வலைகள் மற்றும் இயந்திரங்களைப் பராமரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

படகுகளின் தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்தல், வலைகளைப் புதுப்பித்தல், எந்திரங்களின் செயல்திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், தடைக்காலம் முடிவடைவதை முன்னிட்டு மீனவக் கிராமங்கள் மீண்டும் பரபரப்புடன் காட்சியளிக்கின்றன.

ஆழ்கடல் மீன்பிடிப் பயணத்திற்காக மீனவர்கள் உற்சாகமாக ஆயத்தமாகி வருகின்றனர்.சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்ட திருவள்ளூர், செங்கல்பட்டு,  தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், புதுக்கோட்டை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இருந்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குப் புறப்படத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

61day wait comes end today midnight 15000 tugboats preparing sail deep sea Weed killing festival coastal districts


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->