தமிழகத்தில் இன்று தட்டித்தூக்கப் போகும் கனமழை...! வானிலை மையம் எச்சரித்துள்ள அந்த மாவட்டங்கள் என்னென்ன...? - Seithipunal
Seithipunal


வடக்கு கடலோர தமிழகப் பகுதிகளின் மேல் சுமார் 3.1 கிலோமீட்டர் உயரத்தில் வளிமண்டலச் சுழற்சி நிலவி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த வளிமண்டலச் சுழற்சியை ஒட்டி அதே உயரத்தில் காற்றழுத்தத் தாழ்வு பாதையும் உருவாகியிருப்பதால், தமிழகத்தின் பல பகுதிகளில் மழைச் செயல்பாடுகள் வலுப்பெறக்கூடும் என வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இதன் தாக்கத்தால் இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பதிவாகும் சூழல் நிலவுகிறது.குறிப்பாக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, பெரம்பலூர்,புதுக்கோட்டை,சென்னை, செங்கல்பட்டு,  கடலூர், விழுப்புரம்,  அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதோடு, ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரத்தில், நாகப்பட்டினம்,தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் வானிலை மேலும் தீவிரமடையும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் மழை தொடரும்
நாளை தமிழகத்தின் பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை தொடரக்கூடும். மேலும், வருகிற 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யும் சூழல் நீடிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. இருப்பினும், வட உள் தமிழக மாவட்டங்களில் வெப்பநிலை சற்றே உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை இயல்பான அளவை ஒட்டியே பதிவாகும். எனினும், ஜூன் 15 முதல் 17 வரை வட உள் தமிழகத்தின் சில பகுதிகளில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும். மற்ற பகுதிகளில் வெப்பநிலை வழக்கமான அளவிலேயே நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

சென்னைக்கு மழை வாய்ப்பு
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heavy rains expected Tamil Nadu today What districts Meteorological Department warned about


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->