இலங்கையில் இருந்து 6 சிறுவர்கள் உட்பட 12 பேர் அகதிகளாக தமிழகம் வருகை.! - Seithipunal
Seithipunal


பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் இருந்து மேலும் 12 பேர் தமிழகம் வந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்கு மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும் குழந்தைகளுடன் பசி பட்டினியுடன் தவித்து வருகின்றனர்.

இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி பலர் வாழ வழியின்றி, தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து கொள்ள தமிழகத்திற்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், இலங்கையிலிருந்து இதுவரை தமிழகத்திற்கு 150-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வந்துள்ளனர். 

இந்த நிலையில் தனுஷ்கோடியை அடுத்த இரண்டாம் மணல்திட்டு பகுதியில் உணவு தண்ணீரின்றி 12 பேர் தவிப்பதாக கடலோர காவல் படைக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அவர்கள் விரைந்து சென்று மணல் திட்டில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்களை மீட்டு பத்திரமாக தமிழகத்திற்கு அழைத்து வந்தனர்

காலை முதல் உணவின்றி தவித்த அவர்களுக்கு அங்கிருந்த மீனவர்கள் உணவு கொடுத்து உதவி செய்தனர் என்பதும் தற்போது அவர்கள் இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

6 srilankan refugees comes to tamilnadu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->