அதிர்ச்சி... ஒரே நாளில் 59 பேர் டெங்குவால் அனுமதி.! 
                                    
                                    
                                   59 peoples admitted hospital for dengue fever in puthukottai
 
                                 
                               
                                
                                      
                                            தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதனைத் தடுக்கும் விதமாக டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பொது மக்களிடயே அச்சமும், பீதியும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் காய்ச்சல் காரணமாக ஐம்பது பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக பொன்னமராவதி பாப்பாயி ஆட்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு, கறம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி, கீரனூர், விராலிமலை மற்றும் கந்தர்வகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
மேலும், திறந்த வெளியில் இருக்கும் பிளாஸ்டிக் பைகள், டயர்கள் உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும். டெங்கு தடுப்பு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
                                     
                                 
                   
                       English Summary
                       59 peoples admitted hospital for dengue fever in puthukottai