5 புதிய பேருந்துகள்.. சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. இராஜேந்திரன் துவக்கி வைத்தார்!
5 New Buses Legislator V.G. Rajendran inaugurated!
திருவள்ளூரில் புதிய பேருந்துகளை திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. இராஜேந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் திருவிக பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துகளை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சென்னை - திருப்பதி செல்லும் 201 பேருந்து வழித்தடத்திற்கு புதிய பேருந்துகள் 3 - ம் திருவள்ளூர் திருத்தணி செல்லும் வழிதடத்திற்கு ஒரு பேருந்தும், திருவள்ளூர் -ஊத்துக்கோட்டை செல்லும் வழிதடத்திற்கு ஒரு பேருந்தும், திருவள்ளூர் திருச்சிக்கு மொத்தம் 5 புதிய பேருந்துகளை திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. இராஜேந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் அரசு போக்குவரத்து துறை பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன், துணை பொது மேலாளர் வெங்கடேசன், பணிமனை மேலாளர் பாஸ்கரன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், மாவட்ட அவைத்தலைவர் க.திராவிட பக்தன், ஒன்றிய செயலாளர்கள் எஸ். மகாலிங்கம், கே. அரிகிருஷ்ணன் மோ. ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் ப. சிட்டிபாபு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தா. மோதிலால், திருவள்ளூர் நகராட்சி முன்னாள் தலைவர் பொன். பாண்டியன், நகரக் கழக நிர்வாகிகள் ஆ.கமலக்கண்ணன், ராஜேஸ்வரி கைலாசம், இ.குப்பன், கொப்பூர் டி.திலீப் குமார் , நாபளூர் குமார் , மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் கு. பிரபாகரன், கே.வீனஸ் , ஆர். வாசு, புட்லூர் ஆர்.ராஜேந்திர குமார், என். சுரேஷ்குமார், நகர இளைஞரணி அ. பவளவண்ணன், டி.என் பன்னீர்செல்வம்,எஸ்.பாபு, சி.டி.பாபு, தொழிற்சங்க நிர்வாகிகள் முரளி, ரவி, பழனி, சாம்ராஜ், ஆறுமுகம், ராஜேந்திரன், விஜயகுமார் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
English Summary
5 New Buses Legislator V.G. Rajendran inaugurated!