மௌனம் காக்கும் 47 லட்சம் வாக்காளர்கள்! - பெயர் நீக்கப்பட்டும் மீண்டும் விண்ணப்பிக்காதது ஏன்? ஜனநாயகக் கடமையில் பின்னடைவா? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரவிருக்கும் ஏப்ரல் மாத சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் மேற்கொண்ட 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி' (SIR) ஒரு மிகப்பெரிய ஜனநாயகப் புயலைக் கிளப்பியுள்ளது.

கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கிய இந்தப் பணியின் போது, 2002 மற்றும் 2005-ஆம் ஆண்டுகளில் வாக்காளர்கள் எங்கு வசித்தனர் என்ற விவரங்கள் கோரப்பட்டு, வீடு வீடாகச் சென்று படிவங்கள் பெறப்பட்டன.

இந்தத் தீவிரக் கணக்கெடுப்பின் விளைவாக, டிசம்பர் 18-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் ஒரு அதிரடி மாற்றம் நிகழ்ந்தது. திருத்தப் பணிக்கு முன்பு 6.41 கோடியாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை, திருத்தத்திற்குப் பிறகு 5.43 கோடியாக சரிந்தது.

அதாவது, சுமார் 97.37 லட்சம் பெயர்கள் அதிரடியாக நீக்கப்பட்டன. இதில் 27 லட்சம் பேர் மரணமடைந்தவர்கள் என்றும், எஞ்சிய 66.45 லட்சம் பேர் இடப்பெயர்ச்சி அல்லது முகவரி மாற்றத்தினால் நீக்கப்பட்டவர்கள் என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

நீக்கப்பட்ட 66 லட்சம் பேர் மீண்டும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டும், மக்களிடையே எதிர்பார்த்த ஆர்வம் தென்படவில்லை. ஜனவரி 30-ஆம் தேதியுடன் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில், மொத்தம் 22 லட்சம் மனுக்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன. இதில் 18 வயது பூர்த்தியான புதிய வாக்காளர்கள் 2.5 லட்சம் பேர் போக, நீக்கப்பட்டவர்களில் வெறும் 19.50 லட்சம் பேர் மட்டுமே மீண்டும் உரிமை கோரியுள்ளனர்.

இதன்மூலம், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் சுமார் 47 லட்சம் பேர் மீண்டும் பெயர் சேர்க்க எவ்வித விருப்பமும் காட்டாமல் மௌனம் காப்பது அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய தரவுகளின்படி, வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியிடப்படவுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை சுமார் 5.63 கோடியாக மட்டுமே இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. இது முந்தைய தேர்தல்களை விடக் குறைவான எண்ணிக்கை என்பதால், தேர்தல் களத்தில் இது யாருக்குச் சாதகமாக அமையும் என்ற விவாதம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4point7 million voters remain silent Why reapplied even after names removed setback fulfilling democratic duty


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->