#ராமநாதபுரம் : டிரான்ஸ்பார்மர் மீது மோதி சுற்றுலா பஸ் விபத்து - 41 பேர் காயம் - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சுற்றுலா பேருந்து டிரான்ஸ்பார்மர் மீது மோதி விபத்துக்குள்ளானது 41 பேர் காயமடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 60 பேர் சுற்றுலா பேருந்தில் ராமநாதபுரம் மாவட்டம் இளஞ்செம்பூர் பகுதியில் உள்ள நிறைகுளத்து அய்யனார் கோவிலுக்கு சென்றனர். இதையடுத்து அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் சிவகங்கை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது முத்தாதிபுரம் அருகே வந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பேருந்து சாலையோரம் இருந்த ட்ரான்ஸ்பார்மர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சுற்றுலா பேருந்தில் பயணம் செய்த சிறுவர்-சிறுமிகள், பெண்கள் உட்பட 41 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

41 injured in tourist bus collided with transformer in ramanathapuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->