ஓசூர் அருகே காரில் கடத்திய 400 கிலோ குட்கா பறிமுதல் - வடமாநில வாலிபர் கைது - Seithipunal
Seithipunal


ஓசூர் அருகே பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு கடத்தி வந்த 400 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழியாக குட்கா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய செய்ய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து போலீசார் ஓசூர் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் காரில் மூட்டை மூட்டையாக குட்கா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் காரில் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான 400 கிலோ குட்கா பொருள்கள் இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் காரில் இருந்த வாலிபரிடம் கிடக்குப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தீபக் ஜெய்ஸ்வால்(28) என்பதும், குட்கா விற்பனைக்காக பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு கடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார், தீபக் ஜெய்ஸ்வாலை கைது செய்தனர். மேலும் இந்த குட்கா கடத்தல் குறித்து வாலிபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

400 kg Gutka smuggled in a car near Hosur seized


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->