சிவகங்கையில் பரபரப்பு.! விவசாயியை அடித்துக்கொன்ற 4 பெண்கள்.!! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் 4 பெண்கள் விவசாயியை அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் முனைவென்றி பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராமு(45). இவரும், அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார்(48) என்பவரும் நேற்று முன்தினம் வலையனேந்தல் கிராமம் அருகே மது அருந்தியுள்ளனர். அப்பொழுது போதையில் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதில் ஜெயக்குமார் காயமடைந்தார்.

இதையடுத்து காயமடைந்த ஜெயக்குமார் சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, ஜெயக்குமாரின் மனைவி வேணி, மாமியார் சரசு, அண்ணி அம்சவல்லி மற்றும் உறவினரான இருளாயி ஆகிய நான்கு பெண்களும் சேர்ந்து ராமுவின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பொழுது குடிபோதையில் இருந்த ராமுவை ஆபாசமாக திட்டி, அங்கிருந்த கட்டையால் சரமாரியாக அடித்துவிட்டு சென்றுள்ளனர். இதையடுத்து ராமுவின் தாய் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் ராமு இறந்து கிடந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ராமுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராமுவை அடித்துக்கொன்ற நான்கு பெண்களையும் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 womens beat up the farmer and murder in sivagangai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->