#நாகப்பட்டினம் || ஒரே ஆண்டில் ரூ.16 லட்சம் முறைகேடு.!! திமுக நிர்வாகி உட்பட 4 பேர் கைது.!!
4 people arrested including DMK executive in Rs16 lakh fraud in cooperative bank
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆய்மூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.16 லட்சம் முறைகேடில் ஈடுபட்ட திமுக நிர்வாகி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆய்மூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த 2022-2023 நிதியாண்டில் நகை மற்றும் பயிர் கடன் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர்.
இதனை அடுத்து வங்கி கணக்குகளை தணிக்கை செய்த போது முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை எடுத்து வங்கி தலைவர் அறிவழகன் தற்காலிகமாக பணியிட நீக்கம் செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து வங்கியின் கூட்டுறவு சங்க துணை பதிவாளர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட குற்றப்பிரிவு போலீசார் ரூ. 16 லட்சம் முறை கேடு செய்திருப்பதை உறுதி செய்தனர்.
இதனை அடுத்து கூட்டுறவு வங்கி தலைவரும் திமுக நிர்வாகியுமான அறிவழகன், எழுத்தர்கள் ஆறுமுகம், இளையராஜா, செயலாளர் அன்புமணி ஆகியோரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கூட்டுறவு வங்கியில் ஒரு கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
4 people arrested including DMK executive in Rs16 lakh fraud in cooperative bank