4 புதிய தொழிற்பேட்டைகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
4 new industrial parks inaugurated by Chief Minister M K Stalin
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.09.2025) மாநிலம் முழுவதும் ரூ.145.91 கோடி மதிப்பிலான 28 புதிய திட்டங்களை காணொலி வழியாக திறந்து வைத்தார் மற்றும் அடிக்கல் நாட்டினார்.
முக்கிய அம்சங்கள்:4 புதிய தொழிற்பேட்டைகள் – தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் திருவள்ளூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு, திருவாரூர்.
1 புதிய தனியார் தொழிற்பேட்டை – கடலூர்.சிற்பக்கலை பூங்கா – செங்கல்பட்டு மாவட்டம் கடம்பாடி கிராமத்தில்.உணவுப்பொருள் பதப்படுத்தும் குழும மையம் – நாமக்கல் மாவட்டம் கருமாபுரம்.சிட்கோ நிறுவனத்தின் மூலம் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் 1.36 ஏக்கரில் ரூ.29.27 கோடி மதிப்பீட்டில் தரை தளம் மற்றும் 3 தளங்களுடன் சுமார் 688 தொழிலாளர்கள் தங்கும் வகையில் 100 அறைகளுடன் தொழிலாளர் தங்கும் விடுதி கட்டப்பட உள்ளது.
தொழிலாளர் தங்கும் விடுதி – திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை (100 அறைகள், 688 தொழிலாளர்கள் தங்கும் வசதி).அடிப்படை வசதி மேம்பாடு – 18 தொழிற்பேட்டைகளில் சாலை, மழைநீர் வடிகால், தெருவிளக்கு போன்றவை.இதன்மூலம் வேளாண் பொருட்கள் உற்பத்தி சார்ந்த தொழில்முனைவேர்கள் பயன் பெறுவதோடு சுமார் 300 நபர்கள் நேரடியாகவும், 600 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவர்.
வேலைவாய்ப்பு:இந்த புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் திட்டங்களின் மூலம் சுமார் 2,400 பேர் நேரடியாகவும், 4,800 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.கிட்டாம்பாளையம் அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டையில் 316.04 ஏக்கரில் ரூ.24.61 கோடி மதிப்பில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
பணி நியமனம்:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்ட 11 உதவி மேலாளர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார்.
English Summary
4 new industrial parks inaugurated by Chief Minister M K Stalin