அங்கன்வாடிக்கு வந்த 3 வயது சிறுவன்... உடலில் காயங்கள்; தாய், வளர்ப்பு தந்தை அதிரடி கைது...! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியைச் சேர்ந்த சுஜாதா (23), தனது 3 வயது மகனுடன் வசித்து வந்தார். முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் பிரிந்து சென்ற நி

பின்னர் தினேஷ்குமார் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.திருமணத்துக்குப் பிறகு சுஜாதா, தினேஷ்குமார் மற்றும் சிறுவன் ஆகியோர் திருப்பூர்–மங்கலம் சாலை கோழிப்பண்ணை பகுதியில் வசித்து வந்தனர்.

இருவரும் வேலைக்கு சென்று வந்ததால், சிறுவனை அருகில் உள்ள அங்கன்வாடியில் சுஜாதா சேர்த்திருந்தார்.இந்த நிலையில், நேற்று முன்தினம் அங்கன்வாடிக்கு சென்ற சிறுவன் வழக்கத்திற்கு மாறாக மிகவும் சோர்வாக காணப்பட்டான். மேலும், அவனால் சரியாக நடக்க முடியாமல் தவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் நிலையை கவனித்த அங்கன்வாடி ஊழியர், அவனை பரிசோதித்தபோது காலில் சூடு வைக்கப்பட்ட காயம் இருப்பதை கண்டார். அதுமட்டுமின்றி, உடலின் பல்வேறு பகுதிகளிலும் காயங்கள் இருந்ததால் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, சம்பவம் குறித்து குழந்தைகள் நலப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த அதிகாரிகள், சிறுவனை மீட்டு திருப்பூர் மத்திய காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து சிறுவனின் தாய் சுஜாதா மற்றும் வளர்ப்பு தந்தை தினேஷ்குமார் ஆகிய இருவரையும் காவலர்கள் பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், சிறுவனுக்கு சூடு வைத்து துன்புறுத்தியதாக இருவர் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து சுஜாதா மற்றும் தினேஷ்குமார் ஆகிய இருவரையும் காவலர்கள் கைது செய்தனர்.மீட்கப்பட்ட சிறுவன் குழந்தைகள் நலப் பாதுகாப்பு அமைப்பின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை தொடர்பான இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 year old boy arrives at Anganwadi injuries mother and adoptive father arrested


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->