திருவள்ளூரில் கொடூரம்; நண்பன் கொலைக்கு பழி தீர்ப்பு; 20 வயது இளைஞர் வெட்டிக்கொலை; 03 பேர் கைது..!
3 people arrested for stabbing a youth to death in revenge for the murder of his friend in Thiruvallur
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் என்கிற நவமணி. ரவுடியான இவர் மீது கும்மிடிப்பூண்டி சிப்காட், பொன்னேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் 15-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஆவடிடேங்க் பேக்டரி காவல் நிலைய எல்லைப் பகுதிகளில், சந்தேகத்துக்கிடமான வகையில் மதுபோதையில் சுற்றிய நடராஜை போலீஸார் பிடித்து விசாரித்துள்ளனர்.
அப்போது போலீசாருக்கு திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். அதாவது,கடந்த 5-ம் தேதி நண்பர்களுடன் இணைந்து, ஆவடி அருகே உள்ள பொத்தூர் பகுதியில் வசித்து வந்த சூர்யா (20) என்ற இளைஞரை கொலை செய்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்த கொலை சம்பவம் வெங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்பகுதில் இடம்பெற்றது என்பதால், நடராஜை ஆவடி டேங்க் பேக்டரி போலீஸார் வெங்கல் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
அதனை தொடர்ந்து வெங்கல் போலீஸார் வழக்குப் பதிந்து நடராஜை கொலை நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சட்டமாக கிடந்தசூர்யாவின் உடலைக்கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் தொடர்ந்து நடராஜிடம் நடத்திய விசாரணையின் படி, அவரது நண்பர்களான பெஞ்சமின் (20), ஆகாஷ் (25) ஆகியோரை நேற்று கைது செய்துள்ளனர். கைதான 03 பேரிடம் போலீஸார்விசாரணை செய்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது; ஆவடி அருகே உள்ள பொத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் நிலத்தரகர் சதீஷ் (38). ரவுடி நடராஜின் நெருங்கிய நண்பனான இவர், கடந்த 01-ந் தேதி கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த பரத் (20) என்ற இளைஞரை ஆவடி டேங்க் பேக்டரி போலீஸார் ஏற்கெனவே கைது செய்துள்ளனர். இந்நிலையில், தன் நண்பன் சதீஷை கொலை செய்ததால், அதற்கு பழி தீர்க்கும் வகையில் பரத்தின் நெருங்கிய நண்பனான சூர்யாவை கொல்ல நடராஜ் திட்டமிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
அதன்படி கடந்த 05-ஆம் தேதி நடராஜ், தனக்கு ஏற்கெனவே அறிமுகமான சூர்யாவை மது அருந்த வருமாறு ஊத்துக்கோட்டை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தன் நண்பர்கள் பெஞ்சமின், ஆகாஷ் ஆகியோருடன் சேர்ந்து, காக்கவாக்கம் பகுதியில் வெட்டி கொலை செய்து, வெங்கல் பகுதியில் உள்ள காப்புக்காட்டில் வீசியுள்ள்ளதாக போலீசாரிடம் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
3 people arrested for stabbing a youth to death in revenge for the murder of his friend in Thiruvallur