தலைமைச் செயலகம் முன் பரபரப்பு; கோணிப் பைகளை அணிந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள்..!
Farmers engaged in an innovative protest in front of the Presidential Secretariat
தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி, காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை தலைமைச் செயலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட்டுள்ளதாகக் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதோடு, சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
முழு பயிர்கடன் தள்ளுபடி செய்யக் கோரி கோணிப் பைகளை அணிந்து நூதன முறையில் அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்ததோடு, அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்துக்கு அழைத்துச் சென்று பின்னர் விடுவித்துள்ளனர்.
குறித்த நூதன போராட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் இது குறித்து கூறியதாவது;

வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏற்றம் தரும், வாழ்வாதாரத்தை உயர்த்தும் பட்ஜெட்டாக இல்லை என்றும், முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதியை தான் நிறைவேற்ற கேட்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அடுத்த பிறவியில் விவசாயியாக பிறக்க வேண்டும் என கூறியவர் முதல்வர், அவர் முழு கடன் தள்ளுபடி என கூறியதை நம்பி வாக்களித்தோம் என்றும், வாக்குறுதிப்படி முழு பயிர்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மேலும், நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500-ஆம், கரும்புக்கு ரூ.4500-ம் கொடுப்பதாக கூறினர், ஆனால், கொஞ்சம் கூட தரவில்லை என்றும், கத்தி படத்தில் விவசாயத்தைப் பற்றி நிறைய பேசினார். ஆனால் முதல்வராக எங்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று இளங்கீரன் சுட்டிக்காட்டி பேசினார்.
English Summary
Farmers engaged in an innovative protest in front of the Presidential Secretariat