சமீர் அகமதாக மாறிய பரமசிவம்; BC சான்றிதழ் கேட்டு மேல்​முறையீட்டு மனு; தீர்ப்பை ஒத்திவைத்துள்ள உச்ச நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


தூத்​துக்​குடி, தெற்கு இலந்​தை குளத்​தைச் சேர்ந்த பரமசிவம் என்​பவர் கடந்த 2015-இல் இஸ்​லாமிய மதத்​துக்கு மாறி தனது பெயரை சமீர் அகமது என மாற்றிக் கொண்​டார். அதன்பின்னர் தனக்கு 'முஸ்​லிம் லெப்​பை' என சான்றிதழ் கேட்டு விண்​ணப்பித்தார். குறித்த விண்​ணப்பம் நிராகரிக்​கப்​பட்​ட​ நிலையில், அவர் சென்னை உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் மனு தாக்கல் செய்​தார்.

இந்த மனுவை விசாரணை செய்த மதுரை உயர் நீதி​மன்​ற கிளை, சாதிச் சான்​றிதழ் குறித்து 2024-இல் தமிழக அரசு பிறப்​பித்த அரசாணை, அரசியலமைப்​புச் சட்​டத்​துக்கு முரணானது எனக்​கூறி அரசாணையை ரத்து செய்தது. அத்துடன், அவர் 'பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பைச் சேர்ந்த முஸ்லிம்' என சாதிச் சான்​றிதழ் கோர முடி​யாது எனவும் உத்தரவிட்​டது.

குறித்த உத்​தர​வுக்கு எதி​ராக, உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு மேல்முறை​யீடு செய்தது. அதன்படி, குறித்த மனு உச்ச நீதி​மன்​ற நீதிப​தி​கள் பிர​சாந்த் குமார் உள்ளிட்டோர் அடங்​கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்​தது.

அப்போது தமிழக அரசு சார்​பாக, மூத்த வழக்​கறிஞர்​கள் முகுல் ரோத்​தஹி, சித்​தார்த் லூத்ரா ஆஜராகினர். அவர்கள் சமூக, கல்வி ரீதி​யாக​ பின்​தங்​கிய சமூகங்​களைச் சேர்ந்​தவர்​கள், மதம் மாறி​னாலும் இட ஒதுக்கீட்டுப்பலன்​களைப் பாது​காத்து அனை​வருக்​கும் சமமான வாய்ப்பை உரு​வாக்​கு​வதுமே அரசாணை​யின் நோக்​கம் என தெரிவித்​தனர். இதையடுத்து நீதிப​தி​கள், தமிழக அரசின் மேல்​முறை​யீட்​டு மனு மீதான தீர்ப்​பை தேதி குறிப்​பி​டா​மல்​ ஒத்​தி வைத்துள்ளனர்.​.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Judgment on appeal seeking BC certificate for those who converted to Islam postponed


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->