தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 3.1 லட்சம் பேருக்கு தடுப்பூசி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தினசரி பாதிப்பு 33 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. இதை கட்டுக்குள் கொண்டுவர வரும் 31ம் தேதி முதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. 

வரும் 31 ஆம் தேதியுடன் ஊடங்கு முடிவடையும் நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா நோய்த்‌ தொற்றைக்‌ கட்டுப்படுத்த, பொது மக்களின்‌ நலன்‌ கருதி தமிழ்நாட்டில்‌ முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்‌, பொது மக்கள்‌ அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில்‌ வருவதையும்‌ கூட்டங்களையும்‌ தவிர்க்க வேண்டும்‌ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. நேற்று முன்தினம் 3 லட்சத்து 23 ஆயிரம் 915 பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். கடந்த வாரங்களில் தினசரி எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கு கீழ் இருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

தடுப்பூசி மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் நம்பிக்கை வந்துள்ளது. ஆகையால், அனைவரும் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதில் அவர்வம் காட்டுகின்றனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3.1 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 lakh people vaccinated on may 28


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal