மாணவர்களுக்கு அடிச்ச லக் - ​தமிழக அரசின் குடிமைப் பணித் தேர்வுக்கான பயிற்சி மையம் – முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி ஜூன் 18 முதல் தொடக்கம்! - Seithipunal
Seithipunal


மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு கல்வி ஒரு முக்கிய அடித்தளமாக விளங்கும் நிலையில், தமிழக அரசு உயர்ந்த பதவிகளுக்கான அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுக்கான பயிற்சிகளை முழுமையாக இலவசமாக வழங்கி வருகிறது. சென்னை மைலாப்பூரில் செயல்படும் தமிழக அரசு நடத்தும் குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம், தகுதியுடைய மாணவர்களுக்கு நேரடி பயிற்சி, தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இலவசமாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

பயிற்சியும் ஊக்கத்தொகையும்

இம்மையத்தில் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மூன்று மாதங்கள் முற்றிலும் இலவசமாக முதன்மைத் தேர்வு பயிற்சி அளிக்கப்படும். மேலும், இந்த பயிற்சி பெறும் காலத்திற்குள் மூன்று மாதங்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

2025 தேர்ச்சி பெற்றோர் விவரம்

மே 25, 2025 அன்று நடைபெற்ற குடிமைப் பணித் முதல்நிலைத் தேர்வில், இம்மையத்தில் பயிற்சி பெற்ற 98 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 26 பேர் பெண்கள், மேலும் 2 பேர் மாற்றுத் திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவர்கள் 2024 அக்டோபர் 14 முதல் 2025 மே 24 வரை உண்டி உறைவிடம் உட்பட அனைத்து வசதிகளுடன் பயிற்சி பெற்றுள்ளனர். 34 நேரடி தொடர் வகுப்புகள் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன்மைத் தேர்வு பயிற்சி காலத்திற்கான சேர்க்கை விவரங்கள்

முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி ஜூன் 18, 2025 முதல் தொடங்கும். இதில் தேர்ச்சி பெற்ற அனைத்து தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்கலாம். பயிற்சியில் சேர விரும்பும் ஆர்வலர்கள் ஜூன் 14 காலை 6 மணி முதல் ஜூன் 15 மாலை 6 மணி வரை www.civilservicecoaching.com இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

225 மாணவர்கள் இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்வுசெய்யப்பட்டு, தங்கும் வசதியுடன் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் ஜூன் 15 அன்று இணையத்தில் வெளியிடப்படும். ஜூன் 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் சேர்க்கை நடைபெறும்.

தகவலுக்கு தொடர்பு எண்கள்

மேலும் தகவலுக்கு கீழ்க்கண்ட எண்களில் தொடர்புகொள்ளலாம்:

  • தொலைபேசி: 044-24621475

  • வாட்ஸ்அப் எண்: 9345766957

  • இணையதளம்: www.civilservicecoaching.com


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

25 thousand per month incentiveTamil Nadu government gives students Tamil Nadu Government Civil Service Exam Training Center Training for the main exam begins from June 18!


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->