பெரம்பலுர் அருகே பதுக்கப்பட்ட வெங்காயம், ஏற்படுத்திய பெரும் காயம்!  - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் அருகே 2 ஆயிரம் டன் வெங்காயம் பதுக்கிய விவகாரத்தில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

வெங்காயம் விளையும் பகுதிகளில் விளைச்சல் குறைவானதால், தற்போது நாடு முழுவதும் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக வெங்காயத்தின் விலை ஆனது அதிக அளவில் ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. 

அதேபோல அதிக அளவில் இருப்பு வைக்க சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், வெங்காயத்தை பதுக்குவது குற்றமாகும் எனவும் அறிவித்து இருந்தது.  

இந்த நிலையில் இன்று பெரம்பலூர் பெரம்பலூர் அருகே 2 ஆயிரம் டன் வெங்காயம் பதுக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் செய்த சோதனையில், வெங்காயத்தை பதுக்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இதனை தொடர்ந்து பதுக்கப்பட்ட வெங்காயத்தினை உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சீனிவாசன் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் பதுக்கப்பட்ட வெங்காயம் ஆனது அழுகி இருப்பதால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அளிக்க இயலாது என அதிர்ச்சி தகவல் அளித்துள்ளார். 

இதனால் வெங்காயத்தினை பதுக்கியவர்களுக்கும் பயனில்லாமல் பறிமுதல் செய்த அரசுக்கும் பயனில்லாமல், மக்கள் பயன்பாட்டிற்கு பயன்படாமல் குப்பைக்கு செல்வதுடன் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2000 ton onion captured by Govt Officials


கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,Advertisement

கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,
Seithipunal