2 இளைஞர்கள் உயிரிழப்பு!கேரவனுக்குள் ஒளியும் விஜய்.. தொண்டனை சித்ரவதைப்படுத்தி மாநாடா? ராஜீவ் காந்தி! - Seithipunal
Seithipunal


மதுரையில் நடிகர் விஜய் தலைமையில் நடந்த தமிழக வெற்றிக்கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநாட்டில் பரபரப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மாநாட்டில் பங்கேற்க வந்த இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 506 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்ற இந்த மாநாடு நேற்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிவரை நீடித்தது. அதிகாலையிலிருந்தே தொண்டர்கள் திரளாக திடலுக்கு வந்து குவிந்தனர்.

அந்தவகையில், சென்னை ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (33) என்பவர் மதுரைக்கு வருகை தரும் போது சக்கிமங்கலம் அருகே இயற்கை உபாதைக்காக வாகனத்தில் இருந்து இறங்கியபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

மேலும், நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த ரித்திக் ரோஷன் (18) என்ற இளைஞர் மாநாட்டுத் திடலில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

இதற்கு முன்னர், மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் என்ற கல்லூரி மாணவர் பேனர் கட்டும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்திருந்தார். இதனுடன் சேர்த்து மொத்தம் மூன்று உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்களுக்கான அடிப்படை வசதிகள் குறைவாக இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. “வந்த தொண்டர்களுக்கு தண்ணீர், இளைப்பாற கூடாரம் போன்றவை ஏற்பாடு செய்யப்படவில்லை. தடுப்பு வேலிகளில் க்ரீஸ் தடவி பொதுமக்களைச் சித்ரவதைப்படுத்தி மாற்று அரசியலை தருகிறேன் என விஜய் கேரவனுக்குள் ஒளிந்து படம் காட்டுகிறார்” என திமுக கடும் விமர்சனம் முன்வைத்துள்ளது.

திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி தனது சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டு,
“செலத்தில் 5 லட்சம் இளைஞர்களுடன் 12 ஏக்கரில் மாநாடு நடத்தியபோது, தொண்டர்களுக்கு உணவு, தண்ணீர், ஓய்வு கூடாரம் உள்ளிட்ட அனைத்தையும் ஏற்பாடு செய்தவர் எங்கள் உதயநிதி ஸ்டாலின். ஆனால் விஜய் மாநாட்டில் அடிப்படை வசதிகள் எதுவும் தரப்படவில்லை. கேரவனுக்குள் ஒளிந்துகொண்டு படம் காட்டும் விஜய் சுயநல அரசியலை செய்கிறார்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த பதிவுக்குப் பின்னர், சமூக வலைதளங்களில் திமுக – தவெக தொண்டர்கள் இடையே கடும் வாக்குவாதம் வெடித்து வருகிறது.

 மாநாட்டைச் சுற்றிய உயிரிழப்புகள் மற்றும் வசதி குறைபாடுகள், நடிகர் விஜயின் அரசியல் பயணத்துக்கு தொடக்கத்திலேயே பெரிய சவாலாக மாறியுள்ளன.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 youths killed Vijay shines in the caravan Is it a conference that tortures the workers Rajiv Gandhi


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->