தாலி கட்டும் நேரத்தில் அதிர்ச்சி திருப்பம்...! மணமேடையில் காதலனை கட்டிப்பிடித்த மணமகள்...! - Seithipunal
Seithipunal


ஆந்திரப் பிரதேசத்தின் என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள மைலாரம் பகுதியில் நடந்த ஒரு திருமண விழா எதிர்பாராத சம்பவத்தால் பரபரப்பாக மாறியது. அப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண், அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞரை நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த காதல் விவகாரம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததையடுத்து, அவர்கள் அவசரமாக வேறு ஒருவரை தேர்ந்தெடுத்து திருமணத்தை ஏற்பாடு செய்தனர்.நேற்று முன்தினம் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக மண்டபம் முழுவதும் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் திரண்டு வந்திருந்தனர்.

இசை நிகழ்ச்சிகள், வரவேற்பு நிகழ்வுகள் ஆகியவற்றால் மண்டபம் திருவிழா போல் களைகட்டியது. பாடல்களுக்கு ஏற்றவாறு ஆண்களும் பெண்களும் உற்சாகமாக நடனமாடி கொண்டாடினர்.அடுத்த நாள் காலை திருமணச் சடங்குகள் தொடங்கின. மணமக்கள் திருமண ஆடையில் மணமேடையில் அமர்ந்திருந்தனர்.

புரோகிதர் வேத மந்திரங்களை ஓதி கொண்டிருந்தார். மங்கள வாத்தியங்கள் முழங்கிய நிலையில், சில நிமிடங்களில் மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி கட்ட உள்ளார் என்ற தருணம் வந்தது.அந்த நேரத்தில் திடீரென ஒரு இளைஞர் திருமண மண்டபத்துக்குள் ஓடி வந்து மணமேடையின் முன் நின்றார்.

அவரைக் கண்ட மணமகள் அதிர்ச்சியடைந்தாலும் உடனே மகிழ்ச்சியுடன் எழுந்து ஓடி சென்று, “நீ வந்துட்டாயா?” என்று கூறி அந்த இளைஞரை அணைத்துக் கொண்டார். இந்த காட்சியை பார்த்த மணமகன் மற்றும் மண்டபத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பின்னர் மணமகள், “இவர் தான் என் காதலன். அவருடன் தான் நான் வாழ விரும்புகிறேன்” என்று வெளிப்படையாக தெரிவித்தார். இதனால் கோபமடைந்த சிலர் அந்த இளைஞரை பிடித்து தாக்க முயன்றனர்.இந்த தகவல் கிடைத்ததும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இளைஞரை பாதுகாப்பாக மீட்டனர்.

அங்கு ஏற்பட்ட பரபரப்பைத் தொடர்ந்து திருமண நிகழ்ச்சி உடனடியாக நிறுத்தப்பட்டது.இதுகுறித்து மணமகளின் பெற்றோர், “எங்களுக்கு ஒரே மகள் என்பதால் பல லட்சம் ரூபாய் செலவு செய்து இந்த திருமணத்தை ஆடம்பரமாக நடத்த ஏற்பாடு செய்திருந்தோம்.

ஆனால் நடந்த சம்பவம் எங்களை பெரும் அவமானத்திற்கு உள்ளாக்கியுள்ளது” என்று வேதனை தெரிவித்தனர்.இந்த எதிர்பாராத சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking Bride hugs her boyfriend in front of everyone


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->