கரூரில் 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 2 பேர் பலி!
2 people killed in head on collision between 2 bikes in karur
கரூரில் கடவூர் அருகேயுள்ள வாழ்வார்மங்களம் பகுதியை சேர்ந்த 62 வயதான முருகேசன் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்தார். மேலும்,மேலவெளியூரை சேர்ந்த 67 வயதான முத்து என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

இந்த இரண்டு பெரும்,ஒரு பைக்கில் வையம்பட்டி அருகேயுள்ள தேக்கமலை கோவிலில் நடைபெற்ற விருந்தில் பங்கேற்க, கடவூர் செல்வதற்காக திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வந்தனர்.
மேலும், தேக்கமலை கோவில்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே மற்றொரு பைக்கில் தாளகுளத்துப் பட்டியை சேர்ந்த 39 வயதான வடிவேல் என்பவர் வந்துள்ளார்.சற்றும் எதிர்பாராதவிதமாக 2 பைக்குகளும் நேருக்கு நேர் தாறுமாறாக மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் முருகேசன் சம்பவ இடத்திலேயே பலியாகினார்.மேலும் சம்பவத்தில் முத்து மற்றும் வடிவேல் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட முத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதைத்தொடர்ந்து வையம்பட்டி காவலர்கள் வழக்கு பதிவு செய்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் மேற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்து
English Summary
2 people killed in head on collision between 2 bikes in karur