#தொடர் வேட்டை.! பெரம்பலூரில் 2 போலி டாக்டர்கள் கைது.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர்.

அரசால் அங்கீகரிக்கப்படாமலும், உரிய மருத்துவ படிப்பு படிக்காமலும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வரும் போலி மருத்துவர்களைக் கண்டறியும் பணிகளை சுகாதாரத் துறை இணை இயக்குநர்களுடன் இணைந்து, காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதில் தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 நாட்களில் 72 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆதித்யா கிராமம் குடியிருப்பு பகுதிக்கு எதிரே உள்ள அம்மன் மருந்து கடையில் மாவட்ட மருத்துவர் நலப்பணிகள் இணை இயக்குனர் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது கடையை நடத்தி வந்த வெற்றியூர் பகுதியை சேர்ந்த கலைச்செல்வி (34) என்பவர் உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கலைச்செல்வியை கைது செய்தனர். 

மேலும் அங்கிருந்த மருந்து மாத்திரை மற்றும் ஊசி ஆகியவற்றை சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்தனர். இதேபோல், மேலூர் பகுதியில் சிவப்பிரியா என்ற பெயரில் ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வந்த ராஜாஜி (47) என்பவர் பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசி போட்டு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ராஜாஜியை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 fake doctors arrested in Perambalur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->