20 ஆயிரம் ரூபாய்க்கு இரண்டு பெண் குழந்தைகள் விற்பனை..! திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்..!  - Seithipunal
Seithipunal


சமீப காலமாக பெண் குழந்தைகளை பணத்திற்கு விற்பது போன்ற கொடுமை அதிகமாக நடந்து வருகிறது. அதனைத் தடுக்க என்ன தான் நடவடிக்கை எடுத்து வந்தாலும், தடுக்க முடியாத சூழலே நிலவுகிறது. 

தமிழகத்தின், திருவாரூர் மாவட்டத்தில் பெண்ணிடம் 20 ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு அவரது இரண்டு மகள்களை பின்னலாடை வேலைக்கு அழைத்து சென்ற பெண் புரோக்கர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.                                                                                    

திருவாரூர் மாவட்டத்தில், வெள்ளகுளத்தை சேர்ந்த கணவரை இழந்தவரான தனலட்சுமிக்கு 10 மற்றும் 11 வயதில் இரு மகள்கள் இருக்கிறார்கள். வறுமையில் இருந்த தனலட்சுமியை அணுகி, கோவையிலுள்ள பின்னலாடை நிறுவனத்தில் அவரின் மகள்களுக்கு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி, நீடாமங்கலத்தைச் சேர்ந்த தரகர்கள் கனகம்,சகுந்தலா ஆகியோர் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

இதுகுறித்த புகாரின் பேரில்  குடவாசல் தனிப்படை போலீசார் கோவை ஈரோடு, திருப்பூர்  மாவட்டங்களில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேபோல் பெண் தரகர்களையும் போலீஸார் தேடி வருகிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 children sold for 20 thousand rupees


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->