லிப்ட் கேட்டு பைக்கில் ஏறிய 17 வயது சிறுவன், இளைஞரை வெட்டிப் படுகொலை.!
17 years old boy killed young man in vilathikulam
விளாத்திகுளத்தில் லிப்ட் கேட்டு மோட்டார் பைக்கில் ஏறிய 17 வயது சிறுவன் இளைஞர் ஒருவரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கேசவன் நகரை சேர்ந்தவர் கார்த்திக் ராஜ். இவர் நேற்று இரவு தனது மோட்டார் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மீரான்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் இளைஞர் கார்த்திக் ராஜிடம் லிப்ட் கேட்டு பைக்கில் ஏறியுள்ளார்.
அப்போது பின்னால் அமர்ந்திருந்த சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென கார்த்திக்ராஜை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த விளாத்திகுளம் போலீசார் இளைஞர் கார்த்திக் ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இளைஞரை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த 17 வயது சிறுவனை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
17 years old boy killed young man in vilathikulam