#பெரம்பலூர் : தனியார் விடுதியில் சிறுமியுடன் கல்லூரி மாணவன்.. போலீசில் சிக்கியதால் பரபரப்பு.!
16 years Girl And College Students Caught By Police In Perambalur lodge
16 வயது சிறுமியுடன் ஒரு வாலிபர் விடுதியில் தங்கி இருந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேசபுரம் பகுதியில் போலீசார் தனியார் விடுதி ஒன்றில் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஒரு 16 வயது கல்லூரி படிக்கும் மாணவி ஒரு ஆடவருடன் விடுதியில் தங்கி இருந்துள்ளார்.

குன்னம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற 23 வயது இளைஞருடன் தான் அந்த பெண் தங்கி இருந்துள்ளார். தங்கி இருந்த சிறுமி பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்களுக்கு அறை கொடுத்த விடுதி ஊழியர் மாதவன் மற்றும் கல்லூரி மாணவர் வெங்கடேஷ் ஆகிய இருவர் மீதும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியை பரபரப்பாக்கியுள்ளது.
English Summary
16 years Girl And College Students Caught By Police In Perambalur lodge