144 தடை, மக்கள் கோபம், போலீஸ் தடுப்பு: திருப்பரங்குன்றம் தீப ஏற்றப் போராட்டம் தீவிரம்...! - Seithipunal
Seithipunal


மதுரை ஐகோர்ட்டின் உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவேண்டும். ஆனால் அந்த உத்தரவு நடைமுறைக்கு வராததால், மனுதாரர்கள் நேற்றிரவு CISF பாதுகாப்புடன் மலை உச்சிக்கு செல்ல முயன்றனர். இதை போலீசார் தடுப்பு வேலிகளால் தடுத்து நிறுத்தினர்.

தீபம் ஏற்ற அனுமதி வேண்டி இந்து அமைப்புகள் முழக்கமிட்ட நிலையில், திடீரென தடுப்புகளை உடைக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒரு காவலர் காயமடைந்தார். பல பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். சூழ்நிலையை கட்டுப்படுத்த மதுரை காவல் ஆணையர் திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்தார்.

இதேவேளை, நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக அரசு சார்பில் அவசர மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. “நூற்றாண்டுகளாக தீபம் கோவில் அருகே ஏற்றப்படுகிறது; அதை ஒரு நாளில் மாற்ற முடியாது.

தனி நீதிபதி நீதித்துறை வரம்பை மீறியுள்ளார்” என அரசு வாதிட்டது.மனுதாரர் ஏன் அவசர அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார் என்ற கேள்வியையும் நீதிபதிகள் எழுப்பினர். இருதரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், அரசின் மேல்முறையீட்டுக்கு எதிரான தீர்ப்பை இன்று வழங்கவுள்ளதாக அறிவித்தது.வழக்கு குறித்து விசாரணை தொடர்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

144 ban public anger police blockade Thiruparankundram lamp lighting protest intensifies


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->