தமிழக மீனவர்கள் 12 பேர் விடுதலை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களை  விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடந்து சில நாட்களுக்கு முன்பு 12 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 12 பேரையும் கைது செய்தனர்.

இதனையடுத்து தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி தமிழக அரசும், மத்திய அரசும் தொடர்ந்து கோரிக்கை வைத்தது. இந்த நிலையில் இன்று இலங்கை பருத்தித் துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட 12 மீனவர்களையும் விடுதலை செய்வதாக தெரிவித்தது.

 மேலும், தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை இலங்கை அரசுடைமையாக்கப்படும் எனவும் உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் 12 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதனையடுத்து இந்திய தூதரகம் மூலம் மீனவர்கள் தமிழகம் வந்தடைவார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 tamilnadu fisherman release srilanka court order


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->