அக்னி நட்சத்திரம் முடிந்தும்... 12 இடங்களில் "சதமடித்த வெயில்"...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 4-ந் தேதி தொடங்கிய கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதற்குப் பிறகாவது வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றும் வெயில் வாட்டி வதைத்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் அக்னி நட்சத்திரம் நிறைவடைந்தும், தமிழகத்தின் 12 இடங்களில் இன்று 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. 

இதில், மதுரை நகரம், திருச்சி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, திருப்பத்தூர், நாகப்பட்டினம், சென்னை மீனம்பாக்கம், தஞ்சாவூர், ஈரோடு, மதுரை விமான நிலையம், பாளையங்கோட்டை மற்றும் வேலூர் என 12 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 places in Tamil Nadu heat exceeding 100 degrees Fahrenheit


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->