எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேர் கைது.!
11 fisherman arrested by srilanka Coast guard
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் அத்துமீறி கைது செய்து வருவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனை காலம் காலமாக தொடர்ந்தாலும் கூட இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை.

இந்த நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 நாட்களுக்கு முன்பு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி 11 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்தது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட 11 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பருத்தித்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும், 11 தமிழக மீனவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
11 fisherman arrested by srilanka Coast guard