10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு.. பதிவிறக்கம் செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. மேலும், 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 17ஆம் தேதி வெளியாக உள்ளது 

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று  முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பத்தாம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10th public exam hall ticket from today


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->