ராமநாதபுரம் அருகே சோகம்.! 10ஆம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை.!
10th class student commits suicide in ramanathapuram
ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
ராமநாதபுரம் மாவட்டம் முத்துவயல் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கலைவேணி. இவர்களுடைய மகன் சரண்குமார் (15) காமன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கலைவேணி நேற்று சரண்குமாரை நன்றாக படிக்க சொல்லி கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த சரண்குமார், தற்கொலை செய்து கொள்வதற்காக அரைக்குள் சென்று தூக்குப்போட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து அறைக்குள் சென்று சரண்குமார் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் தாய் கலைவேனி அறைக்குள் சென்று பார்த்துள்ளார்.
அப்பொழுது சரண்குமார் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த சரண்குமாரின் உடலை பற்றி பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
10th class student commits suicide in ramanathapuram