''இந்திய அணியை வீழ்த்தலாம் என்று கனவிலும் நினைக்க முடியாத நிலையில் பாகிஸ்தான் அணி உள்ளது''; மோசின் நக்வியை விமர்சித்துள்ள ஷோயப் அக்தர்..!
Shoaib Akhtar criticizes Mohsin Naqvi after Pakistans humiliating defeat against India
10-வது ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இத்தொடரில், ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான லில் ஆட்டம் நேற்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறத்து.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா அணியில், இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 10 பவுண்டரி, 03 சிக்சருடன் 77 ரன்கள் என அபாரமாக ஆடி, ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த திலக் வர்மா 24 பந்துகளில் 25 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் சிவம் துபே சில பவுண்ரிகளை அடிக்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 07 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் சைம் அயூப் அதிகபட்சமாக 03 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 176 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்திய அணியின் மிரட்டலான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பவர்பிளேவில் 03 விக்கெட்டுக்களை இழந்து தட்டு தடுமாறியது.
சீட்டுக்கட்டு போல விக்கெட்டுகள் சரிய, இதில், 18 ஓவர் சகல விக்கெட்டுகளையும் இழந்த பாக்கிஸ்தான் 114 ரன்களுக்குள் சுருண்டது. இதன் மூலம் இந்தியா அணி, 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி விளையாடிய 03 போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 08 சுற்றுக்கு தகுதிபெற்றது.

இதைத்தொடர்ந்து, டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக 09 முறை மோதிய இந்தியா அணி,08 போட்டியில் வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான படுதோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதாவது ''இந்திய அணியை வீழ்த்தலாம் என்று கனவிலும் நினைக்க முடியாத நிலையில் பாகிஸ்தான் அணி தற்போது உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை எப்படி நடத்துவது என்று மோசின் நக்விக்குத் தெரியவில்லை. உலகில் மிகப்பெரிய குற்றம் என்ன தெரியுமா..? தகுதியற்ற நபரிடம் மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைப்பதுதான்'' என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
English Summary
Shoaib Akhtar criticizes Mohsin Naqvi after Pakistans humiliating defeat against India