மக்களே உஷார் : மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 10ம் வகுப்பு மாணவி பலி!! - Seithipunal
Seithipunal


மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது வேதனைகூறியது. சமீபத்தில் சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் கனமழையால் வீட்டின் பக்கவாட்ட சுவர் இடிந்து விழுந்து வீட்டின் உரிமையாளர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் மேல்சோழங்குப்பம் மதுரா வடகரை நம்பியந்தல் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. விவசாய அணி இவர் பழமையான ஓட்டு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த பத்து நாட்களாக பெய்து வரும் கனமய காரணமாக அவரது ஓட்டு வீட்டில் பிரீசில் ஏற்பட்டு மழை தண்ணீர் ஒழுகியுள்ளது. நேற்று மாலை அப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக வீட்டின் ஒரு பங்கு சுவர் இடிந்து விழுந்துள்ளது.

 இதில் முனுசாமியின் மகள் சுசீதா சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். சுஜிதா பத்தாம் வகுப்பு முடித்து 11ஆம் வகுப்பு செல்ல இருந்த நிலையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10th class girl died when the wall of the house collapsed due to rain


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->