2047 ஆம் ஆண்டு இந்தியா பொருளாதார அளவில் பெரும் சக்தி மிக்க நாடாக மாறும் - நிர்மலா சீதாராமன் பேச்சு..! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேலக்கோட்டையூரில் இந்திய தகவல் தொழில் நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் பத்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:- 

உலகம் தொழில் நுட்பங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது, இதைப் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கை, உயர் கல்விக்கு ஏராளமான வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது. சமூகம் பொருளாதார முன்னேற்றம் போன்றவற்றை மாணவர்கள் அடைய வேண்டியது அவசியம். 

உலக அளவில் வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்பங்களை போட்டி மனப்பான்மையோடு அணுக வேண்டும்.அறிவியல் மற்றும் அதன் திறன் மேம்பாடு மிகவும் அவசியம். இந்தியா வளர்ச்சியை நோக்கி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. உலகளாவிய தலை சிறந்த 58 நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இந்தியர்கள் இருக்கின்றனர்.

2028 ஆண்டு வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை சீனாவை விட இந்தியாவில் உயரும். 2026-ல் நமது நாட்டில் வேலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை 65% ஆக அதிகரிக்கும். எனவே 2047 ஆம் ஆண்டு இந்தியா பொருளாதார அளவில் பெரும் சக்தி மிக்க நாடாக மாறும். அதற்கு இந்தக் குறிக்கோள்களை நாம் பின்பற்ற வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10th Anniversary Graduation Ceremony of Indian Institute of Information Technology Design and Manufacturing


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->