தமிழகத்தில் மீண்டும் அமலுக்கு வரப்போகும் கட்டுப்பாடுகள்.? ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மூன்றாவது அலையை மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்த கட்டுப்பாடுகளின் எதிரொலியாக கட்டுக்குள் வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். 

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினமும் 771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1063 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதில் சென்னையில் மட்டும் 500 பேர் வரை புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 160 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், நேற்று யாரும் கொரோனா தொற்றுக்கு பலியாகவில்லை. தமிழகத்தின் ஒரு நாள் தொற்று அதிகரித்தால், மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்க வாய்ப்புள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1063 corona case in tamilnadu


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal