#BREAKING : சென்னை விமான நிலையத்தில் சிக்கிய ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்.! - Seithipunal
Seithipunal


சென்னை விமான நிலையத்தில் எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வந்த ரூ.100 கோடி மதிப்புள்ள 9 கிலோ 590 கிராம் கொக்கைன் போதை பவுடரை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக வந்த தகவலின் பேரில் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

அப்போது எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த இக்பால் பாஷா (வயது 35) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். சுற்றுலா விசாவில் எத்தியோப்பியா சென்று விட்டு சென்னை வந்ததாக அவர் கூறினார். மேலும் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். 

அதில் உடைமைகள் மற்றும் அவரிடம் இருந்த காலணிகளில் விலை உயர்ந்த போதை பவுடரை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.100 கோடி மதிப்புள்ள 9 கிலோ 590 கிராம் எடையுள்ள கொக்கைன் மற்றும் ஹெராயின் போதை பவுடரை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், இது குறித்து இக்பால் பாஷாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

100 crore cocine ceased in Chennai airport


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->