39 ஆயிரத்தை தாண்டிய தங்கத்தின் விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!
09.08.2022 Gold Price
உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.
அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 அதிகரித்து, இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.39,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,880-க்கு விற்பனை ஆகிறது.
அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.60 காசுகள் உயர்ந்து, ரூ.59-க்கு விற்பனை செய்யப்படுகிறது.