ஒரேயடியாக குறைந்த தங்கத்தின் விலை.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்.. இன்றைய விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்தது, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4695-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் ரூ.4,750-க்கும், ஒரு சவரன் ரூ.38,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.4,695-க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.37,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் குறைந்து, ரூ.58.00ஆகவும், கிலோவுக்கு ரூ.1000 சரிந்து ரூ.58,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

07.09.2022 gold Price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->