WWE நிகழ்ச்சியில் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய வீரர்கள்.! - Seithipunal
Seithipunal


டபிள்யூ. டபிள்யூ. இ நிகழ்ச்சியில் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய வீரர்கள்.!

டபிள்யூ. டபிள்யூ. இ. எனப்படும் உலக மல்யுத்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மோதி கொண்டு தங்களது திறனை வெளிப்படுத்துவார்கள். இந்த நிலையில், ஐதராபாத் நகரில் கடந்த வாரம் டபிள்யூ.டபிள்யூ.இ. போட்டியின் சூப்பர் ஸ்டார் ஸ்பெக்டாகிள் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது.

இந்த நிகழ்ச்சியில், மல்யுத்த சூப்பர் ஸ்டார்களான ட்ரூ மெகின்டயர், ஜிண்டர் மகால், சமி ஜயன் மற்றும் கெவின் ஓவன்ஸ் போன்றோர், ஆர்.ஆர்.ஆர். படத்தின் ஆஸ்கார் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு மேடையில் ஒன்றாக ஸ்டெப் போட்டு நடனம் ஆடி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். 

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளிவந்து வைரலாகியது. இந்த வீடியோவை 60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டும், 6 லட்சத்திற்கும் கூடுதலானோர் லைக் செய்தும் உள்ளனர். 

பொதுவாக டபிள்யூ. டபிள்யூ. இ. போட்டிகளில் தீவிர மோதல், சண்டை போன்றவையே பிரபலம் வாய்ந்தது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடிய காட்சிகளை பலர் புகழ்ந்த போதும் சிலர், இதுபோன்ற நிகழ்ச்சிக்கு நடனம் ஆடியது உகந்ததல்ல என்றும் தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

wwe stars dance on stage


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->