இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளரின் சர்ச்சை செயல்! ‘பணம், குக்கர் திருப்பி தாருங்கள்’ ! - வாக்காளர்களிடம் கேட்டு அதிர்ச்சி!
Controversial act Indian National Congress candidate Give back money and cooker Shocking question from voters
தெலுங்கானா மாநிலத்தில் நகராட்சி தேர்தல் தீவிரமாக நடைபெற்று, வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் தற்போது வாக்குகள் எண்ணிக்கை வேகமாக நடைபெற்று வருகிறது.
இதில் பல வார்டுகளில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வெற்றிகளை குவித்து வருகிறது.இந்நிலையில் அஸ்வராவ்பேட்டா நகராட்சியின் 10-வது வார்டில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தேர்தல் பிரசாரத்தின் போது வாக்காளர்களை கவர பணம் மற்றும் சமையல் குக்கர் உள்ளிட்ட பரிசுப்பொருட்களை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக அவர் தேர்தலில் தோல்வியடைந்ததால் கடும் விரக்தியடைந்தார்.இதைத் தொடர்ந்து,“பரிசு கொடுத்தும் வாக்களிக்கவில்லை” என்ற ஏமாற்றத்தில், வழங்கிய பொருட்களை மீண்டும் திருப்பி தருமாறு அவர் வாக்காளர்களிடம் கேட்டதாக தகவல் பரவியது.
இந்த கோரிக்கை அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.இதனால் ஆத்திரமடைந்த வாக்காளர்கள் குக்கர்களை கையில் ஏந்தி சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். “நாங்கள் எதையும் கேட்டதில்லை, இப்போது ஏன் அவமானப்படுத்துகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினர்.
அதுமட்டுமின்றி,வேட்பாளர் தங்களை மிரட்ட முயன்றதாகவும் குடியிருப்பாளர்கள் குற்றம்சாட்டினர்.இந்த தகவலறிந்த காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்து, பதற்றத்தை போக்கச் செய்தனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Controversial act Indian National Congress candidate Give back money and cooker Shocking question from voters