தவெக கூட்டம் உயிருக்கு ஆபத்து...? 'கையோடு சவப்பெட்டி எடுத்துச் செல்ல வேண்டும்’! - கோவை சத்யன் கடும் சாடல்
Tvk crowd danger life We have carry the coffin our hands Coimbatore Sathyan strongly criticizes
சேலம் மாவட்டத்தில் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் அருகிலுள்ள தாளமுத்து நடராஜன் திடலில் த.வெ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வெளிமாநிலமான மகாராஷ்டிராவில் இருந்து வந்த 37 வயதான சூரஜ் என்ற நபர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கூட்டத்தின் நடுப்பகுதியில் அவர் திடீரென மயங்கி கீழே சரிந்தார். அதன் பின்னர் உடலில் வலிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.உடனடியாக அருகிலிருந்தோர் முதலுதவி செய்து அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்களும் எழுந்துள்ளன. கோவை சத்யன், “தவெக கூட்டத்திற்கு செல்லும் மக்கள் இனிமேல் கையோடு சவப்பெட்டியையும் எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உருவாகிவிட்டது” என கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக கரூரில் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இதில் உயிரிழந்த குடும்பங்களை நேரில் சந்திக்கவில்லை என எதிர்க்கட்சிகள் ஏற்கனவே விமர்சித்திருந்த சூழலில், தற்போது சேலத்திலும் நிகழ்ந்த இந்த மரணம் புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Tvk crowd danger life We have carry the coffin our hands Coimbatore Sathyan strongly criticizes