விஜய் நிகழ்ச்சியில் ஒருவர் திடீர் மரணம்! மருத்துவமனை முன் பத்திரிகையாளர்கள் மற்றும் தொண்டர்கள் மோதல்! - பரபரப்பு வீடியோ
One person dies suddenly Vijay show Journalists and volunteers clash front hospital Sensational video
சேலத்தில் நடைபெற்ற விஜய் தலைமையிலான தவெக கட்சியின் கூட்டத்தைச் சுற்றி பரபரப்பான சூழல் நிலவியது.இந்தக் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகிலுள்ள மருத்துவமனை வெளியே, சில பத்திரிகையாளர்களுக்கும் தவெக தொண்டர்களுக்கும் இடையே திடீர் வாக்குவாதம் வெடித்து மோதலாக மாறியது.

இதில் தங்களைத் தாக்க முயன்றதாக பத்திரிகையாளர்கள் குற்றச்சாட்டு முன்வைத்ததால் அங்கு பதற்றம் அதிகரித்தது.
இதற்கிடையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 37 வயதான சூரஜ் என்ற நபர் கூட்டத்தின் போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். சற்றும் தாமதிக்காமல் உடனடியாக அருகிலிருந்த தொண்டர்கள் அவரை மீட்டு அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த “நிகழ்ச்சியின் போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேலும், மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது” என்று காவலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் காரணமாக கூட்டத் தளத்திலும் மருத்துவமனை வளாகத்திலும் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
English Summary
One person dies suddenly Vijay show Journalists and volunteers clash front hospital Sensational video