#WIPL : மகளிர் ஐபிஎல் ஏலம்.. அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீராங்கனைகள்.! - Seithipunal
Seithipunal


மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தானா அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளார்.

முதலாவது மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 3ம் தேதி முதல் 26ம் தேதி வரை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மகளிர் ஐபிஎல் சீசனில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. மும்பை இந்தியன்ஸ், ராயல் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், அகமதாபாத், லக்னோ அணி ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன.

அதன்படி, 5 அணிகளும் 4669.99 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன. இதனையடுத்து மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வீராங்கனைகளுக்கான ஏலம் தற்போது மும்பையில்  நடைபெற்று வருகிறது.

இதில், ஒவ்வொரு அணிக்கும் ஏலம் எடுக்க அதிகபட்ச தொகையாக ரூ.12 கோடி நிர்ணயித்துள்ளது. மேலும், ஒவ்வொரு அணியும் குறைந்தது 15 வீராங்கனைகளையும், அதிகபட்சமாக 20 வீராங்கனைகளையும் ஏலம் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தானா அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளார். அதன்படி, 3.4 கோடிக்கு பெங்களூர் அணி வாங்கியுள்ளது.

அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீராங்கனைகள்

ஸ்மிருதி மந்தனா (இந்தியா) - 3.4 கோடி - பெங்களூர்

ஆஷ்லே கார்ட்னர் (ஆஸ்திரேலியா) - 3.2 கோடி - குஜராத்

நடாலியா ஷிவர் ப்ருண்ட் (இங்கிலாந்து) - 3.2 கோடி - மும்பை

தீப்தி ஷர்மா (இந்தியா) - 2.6 கோடி - UP Warriors

ஜெமீமா ரோட்ரிக்ஸ் (இந்தியா) - 2.2 கோடி - டெல்லி


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WPL Auction highly paid players


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->