#WPL : சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்.. இன்று மும்பை - டெல்லி அணிகள் பலப்பரீட்சை.! - Seithipunal
Seithipunal


முதலாவது மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 பங்கேற்று விளையாடி வருகின்றன. அதன்படி ஒவ்வொரு அணியும் மற்ற 4 அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். 

இதில் புள்ளி பட்டியலில்  முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதும். 

அதன்படி, புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மேலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதின.

இந்த எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் இடத்தை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் இறுதிப் போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி எலிமினேட்டர்  போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -யுபி வாரியர்ஸ் அணிகள் மோதிய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதனையடுத்து முதலாவது மகளிர் ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு மும்பையில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் முறையாக எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WPL 2023 final today MIW vs DCW


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->