டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல் வெளியீடு.. இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா.? - Seithipunal
Seithipunal


இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. 

இந்தியாவில் அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 174 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து இந்திய அணி ஃபாலோ ஆன் செய்தது. 

அதன் பிறகு களமிறங்கிய இலங்கை அணி 178 ரன்களில் மீண்டும் அவுட்டாகி முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. அதில், 86% வெற்றிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடம் பிடித்துள்ளது. 75% வெற்றிகளுடன் பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்திலும், 66 சதவீத வெற்றிகளுடன் இலங்கை அணி 3-வது இடத்திலும், 60 சதவீத வெற்றியுடன் தென் ஆப்பிரிக்க அணி 4-வது இடத்திலும், 54 சதவீத வெற்றிகளுடன் இந்திய அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

World test championship points table


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->